வாகன சோதனையில் சிக்கிய கஞ்சாவை விற்ற வழக்கு: போலீஸ்காரர்கள் 2 பேர் கைது

வாகன சோதனையில் சிக்கிய கஞ்சாவை விற்ற வழக்கில் போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-09 18:45 GMT

தேவகோட்டை


வாகன சோதனையில் சிக்கிய கஞ்சாவை விற்ற வழக்கில் போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கடந்த 2022-ம் ஆண்டு தேவகோட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் அவரது நண்பர் முகமது யூசுப் ஆகியோர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கிடைத்தது எப்படி?

இவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? என விசாரணை நடந்தது. இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, "திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் சரவணன், அருண்பாண்டியன் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்லடம் அருகே சின்னகரை சோதனை சாவடியில் அவர்கள் 2 பேரும் இரவுப்பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தததில் சுமார் 3 கிலோ கஞ்சா அதில் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த கஞ்சாவை கைப்பற்றிய 2 போலீஸ்காரர்களும், அதனை தங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்த தேவகோட்டை வாலிபர்களுக்கும், எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் ரூ.50 ஆயிரத்துக்கு கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு தேவகோட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், முகம்மது யூசுப் மற்றும் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த பிரவீன், ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பல்லடம் போலீஸ்காரர்கள் சரவணன், அருண்பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் 2 போலீஸ்காரர்களையும் கைது செய்தனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்