மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேச்சேரி:
நங்கவள்ளி அருகே பெரிய சோரகை வனவாசி பிரிவு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ராஜப்பன் (வயது 67). இவர் சம்பவத்தன்று மளிகை கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார். காலையில் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடையில் இருந்த ரூ.3 ஆயிரத்து 500-யை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடியதாக சேலம் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த கவுதம் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.