பாப்பிரெட்டிப்பட்டி:
அரூர் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொம்மிடியில் கள்ளத்தனமாக சந்துக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (வயது 62) மற்றும் பழனியம்மாள் (63) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.