புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-12 18:45 GMT

சிவகாசி, 

சிவகாசி நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தட்டுமேட்டுதெருவில் உள்ள ஒரு பெட்டிகடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, விஜகுமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர். இதே போல் அம்பேத்கர்சிலை அருகில் உள்ள கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் மணிகண்டராஜன் (30) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்