மொரப்பூர்:
கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடத்தூரில் இருந்து புதுரெட்டியூர் செல்லும் சாலையில் சந்தேகப்படும் படி நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தர்மபுரி அக்ரஹார தெருவை சேர்ந்த நக்கீரன் மகன் மோகன்ராஜ் (24) என்பதும், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.