சீலநாயக்கன்பட்டியில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி-2 பேர் கைது

சீலநாயக்கன்பட்டியில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-18 21:44 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் லைன்மேடு, பென்ஷன் லைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 54). தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது சிலர் சீனிவாசனை வழிமறித்து தாக்கியதுடன் அவரிடம் இருந்து ரூ.1000 பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாதகாப்பட்டி தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்த ஜடேஜா என்கிற தியாகராஜன் (26), மல்லூர் சந்தியூர் பகுதியைச் சேர்ந்த தாஸ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து பணத்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்