புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் பகுதியில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ராமர் என்பவரை கைது செய்தனர்.