மது பாட்டில்கள் விற்ற 2 பெண்கள் கைது

Update: 2022-12-13 18:45 GMT

நல்லம்பள்ளி:

வெள்ளக்கல் கிராமத்தில் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தொப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கிராமத்தில் சோதனை நடத்தினர். அப்போது பச்சையம்மாள் (வயது 62), உத்ரமணி (42) ஆகியோர் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 பெண்களையும் கைது செய்த போலீசார், 54 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்