திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது

பொங்கலூரில் திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 10½ பவுன்நகைகளை மீட்டனர்.

Update: 2022-12-07 19:30 GMT


பொங்கலூரில் திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 10½ பவுன்நகைகளை மீட்டனர்.

நகை-பணம் திருட்டு

பொங்கலூர் எஸ்.ஏ.பி.ஸ்டார் ரெசிடென்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது60) வீட்டில் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு போனது. அதுபோல் கொடுவாய், வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த அருணகிரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2¼ பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. மேலும் பொங்கலூர் ஏ.எல்.ஆர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கவுதம் வீட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் திருட்டு போனது. அதுபோல் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டி.வி.எஸ் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி மர்ம ஆசாமிகள் வழிப்பறி செய்தனர்.

3 ேபர் கைது

இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கோவை வெள்ளமடை வையம்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து பால்கார செந்தில் (52), திருப்பூர், சந்திராபுரத்தை சேர்ந்த சுரேந்திரன் (38) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அது போல் இந்த திருட்டுச் சம்பவங்களில் நகைகளை வாங்கிய கோவை பிரபு நகரை சேர்ந்த செந்தில்குமார் (49) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10½ பவுன் நகைகள் மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்