பணம் பறித்த டிப்டாப் ஆசாமி கைது

பணம் பறித்த டிப்டாப் ஆசாமி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-02 16:59 GMT


ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் இறந்தவர்களின் வீடுகளை குறிவைத்து சென்று அவர்களுக்கு அரசின் நிவாரணத் தொகை வந்துள்ளதாகவும் அதனை விரைந்து பெற்று தர உதவி செய்வதாகவும் டிப்டாப் ஆசாமி ஒருவர் மோசடி செய்து வருவதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள கொத்தகுடி பகுதியைச் சேர்ந்த சமயத்துரை என்பவரின் மகன் ஆனந்தராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.

இது பற்றி அறிந்த மர்ம நபர் அங்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து முதல் கட்டமாக ரூ.4ஆயிரத்து 500 பெற்றுக்கொண்ட டிப்டாப் ஆசாமி ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தால் விரைந்து காசோலையை பெற்று தருவதாக கூறியுள்ளார். அங்குசென்ற போது அவ்வாறு யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அந்த நபரை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் பஜார் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த மர்ம நபரை பிடித்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மேற்கண்ட நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் பிரபு (வயது 36) என்பது தெரிய வந்தது. இவர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி ராமநாதபுரம், நெல்லை, சேலம், மதுரை உள்பட் பல்வேறு பகுதிகளில் அரசின் நிவாரணத் தொகை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமி பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்