வியாபாரியிடம் பணத்தை திருடிய வடமாநில வாலிபர் கைது
வியாபாரியிடம் பணத்தை திருடிய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம்:
சேலம் சேலத்தாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), இவர் சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் தின்பண்டங்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்று ரெயில் நிலைய 4-வது நடைமேடையில் அவர் கையில் வைத்திருந்த தட்டில் இருந்த ரூ.500-யை வாலிபர் ஒருவர் திடீரென திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடினார். உடனே, அங்கிருந்த பயணிகளின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சேலம் ெரயில்வே போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சத்தீஷ்கர் மாநிலம் ராயப்பூரை சேர்ந்த பிலிப்சர்மான் (30) என்பது தெரியவந்தது, இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.