ரெயில் பயணிகளிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது
ரெயில் பயணிகளிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று 5-வது நடைமேடையில் நின்ற 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கட்டமடுவு பகுதியை சேர்ந்த செண்பகம் (வயது 34), வள்ளி (48) என்பது தெரிய வந்தது. அவர்கள் ரெயிலில் செல்லும் பயணிகளை குறி வைத்து நகை, பணம் திருடியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது. திருடிய நகைகளை கட்டியாக உருக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.