ஓசூர்:
ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில் போலீசார், சூளகிரி அருகே ஒட்டையனூர் பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் ஒட்டையனூரை சேர்ந்த கண்ணையன் (வயது 58) என்பது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கண்ணையனை கைது செய்தனர்.