பர்கூர் அருகே லாட்டரி விற்ற 2 பேர் கைது

Update: 2022-10-29 18:45 GMT

பர்கூர்:

பர்கூர் போலீசார் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக சின்ன பர்கூரை சேர்ந்த லட்சுமணன் (வயது 57) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மல்லப்பாடியில் லாட்டரி சீட்டு விற்றதாக காதர்பாஷா (52) என்பவரை பர்கூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்