ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள கோபனப்பள்ளியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). விவசாயி. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மல்லேஷ்ரெட்டி, சுரேஷ்ரெட்டி, பாபுரெட்டி, நாகராஜ்ரெட்டி ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான சங்கரப்பாவிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை ராமச்சந்திரன் தட்டி கேட்டார். அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து ராமச்சந்திரனை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மல்லேஷ்ரெட்டி, சுரேஷ்ரெட்டி, பாபுரெட்டி, நாகராஜ்ரெட்டி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாபுரெட்டி கைது செய்யப்பட்டார்.