ஓசூர்:
ஓசூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 29). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று விக்னேஷ் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவருடைய தந்தை வேல்முருகன் கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன் வீட்டில் இருந்த கத்தியால், விக்னேஷைகுத்தினார்.
இதில் அவரது வயிற்று பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை கத்தியால் குத்திய வேல்முருகனை கைது செய்தனர்.