சப்-இன்ஸ்பெக்டரை வாளால் வெட்ட முயன்றவர் கைது

சப்-இன்ஸ்பெக்டரை வாளால் வெட்ட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-16 17:12 GMT

சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சிவகங்கை சுப்பிரமணிய ராஜா தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் கருப்பையா (வயது56) என்பவர் கையில் வாளுடன் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டினாராம். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் அவரை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா, ராதாகிருஷ்ணனை வாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்பட 5 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Tags:    

மேலும் செய்திகள்