நாமக்கல்லில் தனியார் நிறுவன ஊழியரை கொல்ல முயற்சி 2 பேர் கைது

நாமக்கல்லில் தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-11 16:37 GMT

நாமக்கல்லில் தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவன ஊழியருக்கு வெட்டு

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வள்ளிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நண்பர்களுடன் மது குடித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த அவரது உறவினரான வள்ளிபுரத்தை சேர்ந்த ஹரீஸ் (24) தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் திடீரென சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் அவருக்கு தலை, முகம் என 5 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் நிலைகுலைந்த சதீஷ்குமாரை அவருடைய நண்பர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 பேர் கைது

இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரீஸ், அவருடைய உறவினர் சுகன் (30) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் முன்விரோதம் ஏற்பட்டு, இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்