ஓசூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
ஓசூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.
ஓசூர்:
ஓசூர் பேடரப்பள்ளி பாரதியார் நகரை சேர்ந்தவர் ரஜினி (வயது 44), கூலித் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அதை மர்ம நபர் திருடிச்சென்றார். இது குறித்து ரஜினி, ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளை திருடியது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மோட்டன்குறிச்சி நத்தமேடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.