சாராயம் காய்ச்சி விற்றவர் கைது
சாராயம் காய்ச்சி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே கல்பகனூர் கிராமம் மங்கான்காடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 59). இவர், தனது விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து ஆத்தூர் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சாராயம் காய்ச்சி விற்ற ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.