நாமக்கல்லில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது

நாமக்கல்லில் 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-27 19:20 GMT

நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்நிலையம் அருகே மஞ்சள் பையுடன் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் மாரிகங்காணி தெருவை சேர்ந்த சூர்யா (வயது 28) என்பதும், பையில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை கைது செய்த இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன், அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்