கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-06 19:41 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வையத்தான் பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது அவர்கள் இளையராஜா (வயது 28), மருதுபாண்டி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து. சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்