மனைவியை கத்தியால் குத்தியவர் கைது
மனைவியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை கூடல்புதூர் எல்லைக்கு உட்பட்ட மிளகரணை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி கீர்த்திகா (வயது 24). கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் வீட்டில் இருந்த கத்தியால் கீர்த்திகாவை குத்திவிட்டார். இதுகுறித்து, அவர் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.