ரூ.13 லட்சத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர் கைது

முதியவருக்கு அரசு வழங்கிய இழப்பீட்டு பணத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-15 20:44 GMT


முதியவருக்கு அரசு வழங்கிய இழப்பீட்டு பணத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர் கைது செய்யப்பட்டார்.

அபகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் வீரன் (வயது 90). இவர் மதுரை எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், எனக்கு சொந்தமான நிலத்துக்கு அரசாங்கம் இழப்பீடாக வழங்கிய ரூ.13 லட்சம் வழங்கியது.

அதனை பை-பாஸ் ரோடு துரைச்சாமி நகரை சேர்ந்த வீரணன், அவரது மகன் வினோத் ஆகிய 2 பேரும் போலி ஆவணங்களை பயன்படுத்தி பணத்தை அபகரித்து விட்டனர் என்று கூறப்பட்டு இருந்தது.

எனவே இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது

எனக்கு 90 வயது ஆகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கையெழுத்து போட முடியாமல், கை ரேகை மட்டுமே பதிவு செய்து வருகிறேன். எனவே தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொடுத்த பணத்தை போலி ஆவணம் வாயிலாக வங்கி அதிகாரிகள் துணையுடன் வீரணன் மற்றும் அவரது மகன் வினோத் ஆகிய 2 பேரும் அபகரித்துக்கொண்டனர் என்று தெரிவித்தார். அதன்பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வீரனுக்கு சொந்தமான நிலத்துக்கான நிவாரண தொகையை வினோத் தரப்பினர் போலி ஆவணம் தயாரித்து அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி கொண்டது தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் ரூ.13 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்