வாலிபரை பாட்டிலால் குத்தியவர் கைது
வாலிபரை பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை பொட்டக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று திருவாடானை சமத்துவபுரம் அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு குடிப்பதற்காக அருகில் உள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் நின்றுகொண்டிருந்த திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (31) இளையராஜாவிடம் குடிப்பதற்கு மது கேட்டுள்ளார். இதற்கு இளையராஜா மறுத்ததால் ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து இளையராஜாவை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த இளையராஜா ராமநாதபுரம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.