அரூர்:
அரூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் அரூர் கோட்டத்தில் சாராயம், மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றது, ஓட்டல், பெட்டிக்கடையில் மது குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் பகுதிகளில் 16 பெண்கள் உள்பட 71 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,407 மதுபாட்டில், 50 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.