கிருஷ்ணகிரியில்கார் கண்ணாடியை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது

Update: 2023-09-22 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மேல் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 41). டான்ஸ் மாஸ்டர். அதே பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் (40). ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் ராஜேந்திரகுமார் வீட்டு முன்பு காரை நிறுத்தி இருந்தார். அதே போல விஜயகுமாரும் ஆட்டோவை அதே பகுதியில் நிறுத்தினார். அப்போது வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது விஜயகுமார், ராஜேந்திரகுமாரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்