கிருஷ்ணகிரி
சூளகிரி தாலுகா காளிங்கவரம் அருகே உள்ள பெரிய பேடப்பள்ளியை சேர்ந்தவர் லலிதா (33), அதே போல பர்கூர் தாலுகா காரகுப்பத்தைச் சேர்ந்தவர் சம்பத் (57). இவர்கள் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதா மற்றும் சம்பத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.