புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 14 பேர் கைது

Update: 2023-09-05 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது தர்மபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம், உட்கோட்ட பகுதிகளில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 14 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 14 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்