கேபிள் ஒயர்களை திருடியவர் கைது

Update: 2023-08-01 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேபிள் ஒயர்கள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மர்மநபர்கள் அந்த ஒயர்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது பாலக்கோடு அருகே எர்ரன அள்ளியை சேர்ந்த ஆஞ்சநேயர் (வயது 52) என்பவர் திருடியது தெரிய வந்தது, உடனே போலீசார்ஆஞ்சநேயரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்