கிருஷ்ணகிரி அருகேமொபட்டில் கர்நாடக மதுபாக்கெட்டுகள் கடத்தியவர் கைது

Update: 2023-07-20 19:30 GMT

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சிவிகுமார் மற்றும் போலீசார் குருபரப்பள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிக்கரிமேடு என்ற இடத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஜீனூர் பிரிவு சாலையில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். வாகனத்தை நிறுத்தியவுடன் ஒருவர் தப்பியோடினார். பிடிப்பட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூர் அடுத்த கும்மனூரை சேர்ந்த முனியப்பன் (வயது 30) என்பதும், தப்பி ஓடியது அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (35) என்பதும் தெரிந்தது.

மேலும் 2 பேரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து 550 மதுபாக்கெட்கள் மற்றும் 2 மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி கள்ளத்தனமாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாக்கெட்டுகள், பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முனியப்பனை கைது செய்தும், தப்பியோடிய சத்தியராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்