சாராயம் விற்ற 2 பேர் கைது
திருத்துறைப்பூண்டியில் சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி அருகே அருகே சாராயம் விற்ற நந்திமாங்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜ்(வயது58), பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை(48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.