சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
திருப்பூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும். விற்பனை உரிமை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு மதுரை, ஈரோடு மாநகராட்சியில் தள்ளுவண்டி வழங்கியதுபோல் திருப்பூர் மாநகராட்சியிலும் வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். மத்திய பஸ் நிலையத்தில் பொரி வண்டியை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கை அடங்கிய மனுவை மாநகராட்சி ஆணையாளரிடம் கொடுத்தனர்.