அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-27 15:42 GMT


தாராபுரம், வெள்ளகோவிலில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் தாசில்தார் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், கருவூலத்துறை அலுவலகம், ஐ.டி.ஐ, மாவட்ட கல்வி அலுவலகம், வேளாண்மைதுறை அலுவலகம், வணிகவரி துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் கே.செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்தவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், எம்.ஆர்.பி. செவிலியர் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

அரசு பள்ளிகளில் காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தனியார் மேற்கொள்வதைக் கைவிட்டு சத்துணவு ஊழியர்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் மேகலிங்கம், கிளை செயலாளர் இல.தில்லையப்பன், இணை செயலாளர்கள் தங்கவேல், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளகோவிலில்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் காட்டு ராணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ், ராணி ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி கூறினர். முடிவில் வட்ட கிளை துணைத் தலைவர் ரவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்