12 மணி நேரம் வேலை திட்டத்தை கைவிடுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் திருப்பூர் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க கிளைச் செயலாளர் சங்கிலித்துறை தலைமை தாங்கினார். முன்னாள் மாநில உதவி செயலாளர் சுப்பிரமணியம், ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகி சௌந்தர பாண்டியன், குமரவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் 12 மணி நேர வேலை திட்டத்தை கைவிட வேண்டும், விருப்ப ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும், 56 ஜே சட்டத்தைப் பயன்படுத்தி ஊழியர்களை விரட்டும் நடவடிக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.