முசிறி, செப்.10-
முசிறி கைகாட்டி அருகே உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனித ஆரோக்கிய அன்னை திருவிழாவும் மற்றும் அன்னையின் பிறப்பு விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு பங்குத்தந்தை குழந்தை ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பலி தலைமை அந்துவான் அடிகளார், அகஸ்டின் அடிகளார் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். நிகழ்ச்சியில் ஆரோக்கிய அன்னையுடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடம்பர தேர் முக்கிய வீதிகளில் பவனி வந்தது. இதில் அருள் கன்னியர்கள், பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.