சினிமா பாடலுக்கு நடனமாடிய அரியலூர் பெண் அதிகாரி

சினிமா பாடலுக்கு அரியலூர் பெண் அதிகாரி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Update: 2022-12-08 18:20 GMT

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் 'மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா' பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் சார்பில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த விழாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே... என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடினார். அவரது நடனம் பார்வையாளா்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது பார்வையாளர்கள் அடித்த விசில் சத்தம் காதை கிழித்தது. மேலும் டாக்டர் கீதாராணியின் அந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது நடன வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே டாக்டர் கீதாராணி அரியலூர் மாவட்டத்தில் நடந்த நூற்றாண்டு விழாவிலும் இதே பாடலுக்கு நடனமாடினார். மேலும் அவர் அந்த விழாவில் கரகத்தை தலையில் சுமந்தும், சிலம்பம் சுற்றியவாறும் சினிமா பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூரை சேர்ந்த டாக்டர் கீதாராணி ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்