அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணி தீவிரம்

மேகமலை பகுதியில் அரிகொம்பன் யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-05-29 19:00 GMT

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரிக்கொம்பன் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் குழு இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை முழுமையாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே யானையை பார்ப்பதற்காக வாகனங்களில் மக்கள் வருகின்றனர். இந்த மக்களை பாதுகாப்பாக தடுத்து நிறுத்துவதும் மற்றொரு வேலையாக இருக்கிறது.

இதற்காக போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இரவிலும் யானையின் நகர்வை கண்காணித்து வருகின்றனர். மேகமலையில் இருந்து இறங்கி வந்த யானை, மீண்டும் மேகமலையை நோக்கி நகர்ந்து செல்கிறது. அரிக்கொம்பன் யானையை அப்புறப்படுத்த 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. அரிக்கொம்பன் யானை பிரச்சினைக்கு நிச்சயம் நல்ல முடிவு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்