ஆரியங்காவு கருப்பசாமி கோவில் பூக்குழி திருவிழா

புளியங்குடியில் ஆரியங்காவு கருப்பசாமி கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.;

Update:2023-09-21 00:15 IST

புளியங்குடி:

புளியங்குடியில் அமைந்துள்ள ஆரியங்காவு கருப்பசாமி கோவில் பூக்குழி திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் கணபதி ஹோமம், சக்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அக்னி சட்டி, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கினர். பின்னர் ஆயிரங்கண் பானை அழைத்தல் நிகழ்ச்சியும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு வில்லிசை கச்சேரி நடைபெற்றது. நேற்று சுவாமிக்கு தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் மற்றும் அன்னபெட்டி, முளைப்பாரி அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் சாம படைப்பு நடைபெற்றது. இன்று காலை குருபூஜையை தொடர்ந்து அன்னதானமும், பொங்கல் பானை அழைப்பும், நேமிதம் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்