அரியாண்டிபுரம் குருதா சுவாமிகள் குருபூஜை

அரியாண்டிபுரம் குருதா சுவாமிகள் குருபூஜை விழா நடைபெற்றது.;

Update:2023-10-16 00:30 IST

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் மாதேஸ்வர வேதாந்த மடத்தின் மடாதிபதி சொரூபானந்த மகரிஷியின் சீடரும் 2-வது மடாதிபதியுமான ஸ்ரீலஸ்ரீ குருதா சுவாமிகளின் 21-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. புனித நீர் குடங்களை மடாதிபதிகள் தலையில் சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து அபிஷேகம் செய்தனர்.சிவலிங்க வடிவில் காட்சி தரும் குருதா சுவாமிகளுக்கு விசேஷ பூஜைகளை அரியாண்டிபுரம் வேதாந்த மடாதிபதி மாதவ குமார சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்து சிவனடியார்களுக்கு அருளாசி வழங்கினார்.

இதில் இளையான்குடி வேதாந்த மடாதிபதி சிவா குப்புசாமிகள் பார்த்திபனூர் மடாதிபதி செல்வராஜ் சுவாமிகள் மற்றும் மடாதிபதி நிர்வாகிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்