அவினாசி போலீசார் தேவம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் (வயது 28) என்பதும், பச்சாம்பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.