பனப்பாக்கம் பேரூராட்சியில் பகுதி சபை கூட்டம்

பனப்பாக்கம் பேரூராட்சியில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-02 18:12 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வார்டுகள் தோறும் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களின் அடிப்படை தேவைகளான தூய்மையான குடிநீர், கல்வி, மருத்துவம், மின்சாரம், சுற்றுப்புற சுகாதாரம், பசுமை பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், செயல் அலுவலர் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்