கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்லில் கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-11 19:51 GMT

நாமக்கல் நல்லிபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி (வயது45). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடிபோதையில் இருந்த ரவி விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ரவியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்