கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை

ரத்தினகிரி அருகே கட்டிட மேஸ்திரி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-13 18:55 GMT

குத்திக்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரியை அடுத்த டி.சி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. அதேப்பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (32), ஆட்டோ டிரைவர்.

இவர்கள் இருவரும் நேற்று இரவு குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கிருஷ்ணனை, கிருபாகரன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வலை வீச்சு

இதுகுறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து, தலைமறைவான ஆட்டோ டிரைவர் கிருபாகரனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்