தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Update: 2022-07-04 09:03 GMT

சென்னை,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில்,

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கடிதம் எழுதி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்