பிரத்யேகமான தொலைநோக்கு திட்டத்தை தயாரித்த கலெக்டர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
பிரத்யேகமான தொலைநோக்கு திட்டத்தை தயாரித்த கலெக்டரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 9 மணி அளவில் திருச்சிக்கு முதல் -அமைச்சர் வருகை தந்திருந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வரவேற்றார். அப்போது, திருச்சி மாவட்டத்திற்கென தான், பிரத்யேகமாக தயாரித்த தொலைநோக்கு திட்ட ஆவணத்தை முதல்-அமைச்சரிடம் கலெக்டர் வழங்கினார். அதைபெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், கலெக்டரை பாராட்டியதோடு, அந்த ஆவணத்தை படித்து விட்டு இதுகுறித்து கலந்தாலோசனை செய்வதாக தெரிவித்தார்.