ஒலிம்பிக், பாராலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

ஒலிம்பிக், பாராலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்தது.

Update: 2022-08-28 18:49 GMT

சென்னை,

ஒலிம்பிக், பாராலிம்பிக், செஸ் ஒலிம்பியாட், காமன்வெல்த், கேலோ இந்தியா ஆகிய விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட பல விளையாட்டு வீரர்கள், அவர்களின் பெற்றோர், பயிற்சியாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டுகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த 65 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சான்றிதழ், கேடயங்களை வழங்கி பாராட்டினார். குறிப்பாக சமீபத்தில் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பவானி தேவி, உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விழாவில் பாராட்டப்பட்டனர்.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது, "பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்