அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில கபடி போட்டிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.

Update: 2022-11-11 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் குறுவட்ட அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட கபடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். மேலும் இந்த மாணவிகள் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மனோகரன், ஆசிரியர் முத்து விஜயன் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி, மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்