மாநில போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
மாநில அளவிலான பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பட்டிவீரன்பட்டி அருகே செங்கட்டான்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சிவஹரிதா. சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா பேச்சுப்போட்டியில் சிவஹரிதா கலந்துகொண்டு முதலிடம் பிடித்தார். அதேபோல் அப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் தேவஸ்ரீ என்ற மாணவி கட்டுரை போட்டியில் 2-ம் இடம் பிடித்தார். இதையடுத்து 2 மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா, வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ரோட்டரி சங்க பட்டய தலைவர் மாதவன், தலைவர் இளஞ்செழியன், செயலாளர் ரகுநந்தன், செங்கட்டான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோபிகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியை சுகுமாரி, ஆசிரியை சாரதாதேவி ஆகியோர் கலந்துகொண்டு, மாநில போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் சிவஹரிதா, தேவஸ்ரீ ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கினர்.