தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய புதிய உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக ரா.வீரப்பன், ஆர்.ரோஜா, ரவிச்சந்திரன், நா.மணிமாறன், பாபு, எஸ்.குமார், எஸ்.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.;

Update:2023-12-14 03:11 IST

சென்னை,

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக ரா.வீரப்பன், ஆர்.ரோஜா, ரவிச்சந்திரன், நா.மணிமாறன், பாபு, எஸ்.குமார், அஞ்சாஸ்பரன், சிவக்குமார், சந்திரன், எஸ்.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதேபோல், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினரான கே.பொன்னுசாமி எம்.எல்.ஏ., புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் வெ.மாறன், ரத்தினசாமி, சரவணன், சாத்துக்குட்டி, க.மல்லிகா, ராமசாமி, வீரலட்சுமி, ராஜசேகரன் செல்வம், குணசேகரன், வ.தெய்வம், அ.பாலாஜி, கா.ராஜவேல், டாக்டர் புஷ்பலீலா ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்வில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமி பிரியா, பழங்குடியினர் நல இயக்குனர் எஸ்.அண்ணாதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்